/உள்ளூர் செய்திகள்/மதுரை/சோழவந்தான் தொகுதியில் எம்.பி.,மேம்பாடுதிட்டபணிக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடுசோழவந்தான் தொகுதியில் எம்.பி.,மேம்பாடுதிட்டபணிக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு
சோழவந்தான் தொகுதியில் எம்.பி.,மேம்பாடுதிட்டபணிக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு
சோழவந்தான் தொகுதியில் எம்.பி.,மேம்பாடுதிட்டபணிக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு
சோழவந்தான் தொகுதியில் எம்.பி.,மேம்பாடுதிட்டபணிக்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 30, 2011 03:18 AM
சோழவந்தான்:தேனி எம்.பி., மேம்பாடு திட்டத்தில் சோழவந்தான் சட்டசபை
தொகுதியில் பல்வேறு திட்டப்பணிக்கு 40 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் சட்டசபை தொகுதியில் நேற்று மாலை தேனி லோக்சபா தொகுதி
ஜெ.எம்.,ஆரூண் எம்.பி.,சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சோழவந்தான் அருகே
திருவேடகம் ஊராட்சி திருமால்நத்தம் கிராம பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
ஆரூண் எம்.பி.,கூறுகையில், ''திருமால்நத்தத்தில் 3 லட்ச ரூபாய்க்கு
சுகாதார வளாகம் கட்டடம், கரட்டுப்பட்டி, திருவாலவாயநல்லூர் தலா 2
லட்சத்தில் நிழற்குடை, விராலிப்பட்டியில் 3 லட்சம் ரூபாயில் நாடகமேடை
அமைத்தல், தென்கரை ஊராட்சியில் 5 லட்ச ரூபாயில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி
கட்டப்படும். அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாலமேடு, வலையப்பட்டி,
அழகாபுரி, மேலச்சின்னம்பட்டி, குமாரம் உட்படபத்து கிராமங்களில் குடிநீர்,
சமுதாயக்கூடம், சுகாதாரவளாகம், பள்ளி கட்டடம் பல்வேறு திட்டப் பணிகளுக்கு
25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது, மண்ணாடிமங்கலம் ஊராட்சி
கண்ணுடையாள்புரம், அய்யப்பநாயக்கன்பட்டியில் சமுதாயக்கூடம், பள்ளி கட்டடம்,
நவீன கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கப்படும்' என்றார்.
அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மூர்த்தி, சங்கரபாண்டி, நகர் தலைவர் முத்துப்பாண்டி, வட்டார தலைவர் குருசாமி சென்றனர்.