ADDED : ஜூலை 29, 2011 11:16 PM
கூடலூர் : கூடலூர் நேசம் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கவுரவத்தலைவர் கோபால் தலைமையில் நடந்தது.
தலைவர் செல்வகுமார் வரவேற்றார். ஏழை மாணவர்கள் 120 பேருக்கு சீருடை வழங்கப்பட்டது. கூடலூரைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை தேர்வு செய்து மேல்நிலைக்கல்வி வரை உள்ள அனைத்து கல்விச் செலவுகளையும், அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. கோம்பையைச் சேர்ந்த மாணவர் திலீபனுக்கு பொறியியல்படிப்பிற்கு மூன்று ஆண்டிற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டது.
தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ., என்.எஸ். கே.பி. பள்ளி தாளாளர் அச்சுதன், நகர்நலக்குழு தலைவர் அருண்குமார், தலைமை ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, பூவதி, புஷ்பம், அறக்கட்டளை செயலாளர் சுதாகர், பொருளாளர் நேதாஜி பங்கேற்றனர்.