Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சோலையாறு நீர்மட்டம் 152 அடியாக உயர்வு

சோலையாறு நீர்மட்டம் 152 அடியாக உயர்வு

சோலையாறு நீர்மட்டம் 152 அடியாக உயர்வு

சோலையாறு நீர்மட்டம் 152 அடியாக உயர்வு

ADDED : ஜூலை 28, 2011 09:31 PM


Google News
வால்பாறை : தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சோலையாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்ந்துள்ளது. வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் காடம்பாறை அணையிலிருந்து நாள் தோறும் 400 மெகாவாட் மின்சாரமும், சோலையாறு அணையிலிருந்து நாள் தோறும் 70 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. பருவ மழை பெய்துவரும் நிலையில் வால்பாறையில் கடுங்குளிரும், கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் எப்போதும் பனிமூட்டம் காணப்படுவதால் இந்த வழித்தடத்தில் வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளகான மேல்நீராறு, கீழ்நீராறு, நடுமலை ஆறு, அக்காமலை, வெள்ளமலை டனல் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 152.34 அடியாக உயர்ந்தது. அணை நிரம்ப 8 அடி நீர்மட்டமே உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 1,793 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 1,428 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வால்பாறையில் நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்)

வால்பாறை-11, சோலையாறு-10, மேல்நீராறு-18, கீழ்நீராறு-3,பரம்பிக்குளம்-12.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us