Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க., தொண்டர் சைக்கிள் பயணம்

அ.தி.மு.க., தொண்டர் சைக்கிள் பயணம்

அ.தி.மு.க., தொண்டர் சைக்கிள் பயணம்

அ.தி.மு.க., தொண்டர் சைக்கிள் பயணம்

ADDED : ஜூலை 26, 2011 11:31 PM


Google News

கள்ளக்குறிச்சி : தமிழகத்தில் மீண்டும் ஜெ., முதல்வரானதற்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க., தொண்டர் சைக்கிளில் சுற்று பயணம் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.முக., வெற்றி பெற்று ஜெ., மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு நகர அ.தி.மு.க., இளைஞரணி துணை செயலாளர் வடிவேல் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்செங்கோடு அண்ணாசிலை முன்பு துவங்கிய இவரது சைக்கிள் பயணத்தை கடந்த 21ம் தேதி வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.



இவர் நாமக்கல், ராசிபுரம், ஆத்தார், வீரகனூர், கச்சிராயபாளையம் வழியாக நேற்று கள்ளக்குறிச்சிக்கு வந்தார். இவருக்கு அ.தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். சைக்கிள் பயணத்தை இவர் சென்னையில் முடிக்கிறார். பயணம் முடிந்தவுடன் வீட்டிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தப்போவதாக வடிவேல் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us