நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்ககளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். மாணவர்களின் மனவளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகாரிக்கும் வண்ணம் பண்ருட்டி மனவளக்கலை யோகா அறக்கட்டளை பேராசிரியர் பழனிவேல், துணை பேராசிரியர்கள் ரங்கராஜன், மலர்விழி பயிற்சி அளித்தனர். காயகல்பம் என்ற சிறப்பு நிகழ்ச்சியும் செய்து காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் செய்திருந்தார்.