ADDED : ஜூலை 25, 2011 02:01 AM
ஆனைமலை : இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடந்தது.
கணக்கெடுப்பில் பணியாற்றிய சிறந்த களப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தால் வெளியிடப்பட்டு அவை அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக விருதுகள் வழங்கப்பட்டன.கோவை மாவட்டத்தில் சென்சஸ் 2011 என்ற பெயரில் நடைபெற்ற கணக்கெடுப்பில் பொள்ளாச்சி வட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம, நகர பஞ்சாயத்து, சென்சஸ் டவுன் ஆகியவற்றில் கணக்கெடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட களப்பணியாளர்களில் பணியாற்றியமைக்காக சிறந்த மேற்பார்வையாளருக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.ஆனைமலை ஒன்றிய திவான்சாபுதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரனுக்கு கலெக்டரால் விருது வழங்கப்பட்டது.