ADDED : ஜூலை 24, 2011 09:13 PM
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஐந்துகால பூஜைகள் நடந்தது.
பூஜையில் பைரவர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கணேசன், அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், அறங்காவலர்கள் மேகநாதன், முருகேசன், சாந்தி, ராஜேந்திரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.