Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஊழலுக்கு எதிராக பொதுமக்கள்போராட வேண்டும்: நல்லகண்ணு

ஊழலுக்கு எதிராக பொதுமக்கள்போராட வேண்டும்: நல்லகண்ணு

ஊழலுக்கு எதிராக பொதுமக்கள்போராட வேண்டும்: நல்லகண்ணு

ஊழலுக்கு எதிராக பொதுமக்கள்போராட வேண்டும்: நல்லகண்ணு

ADDED : ஜூலை 24, 2011 02:17 AM


Google News
திருவள்ளூர்:கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில், மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி, ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடந்தது.மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில், திருவள்ளூர் பஜாரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

துவக்கத்தில் அனைவரும், தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஊழலை எதிர்க்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.மார்க்சிஸ்ட் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசும் போது, ''இந்தியாவில், காங்கிரஸ் ஆட்சியில் தற்போது ஊழல் மலிந்துள்ளது. இந்தியாவின், ஒரு ஆண்டின் மொத்த பட்ஜெட், 11 லட்சம் கோடி ரூபாய்.ஆனால், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில், 75 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அதில் இன்னும் வெளியில் வராத தகவல்கள் உள்ளன.இந்த ஊழல் தொடர்பாக மேலும், பல அரசியல் பிரமுகர்கள் சிக்கும் நிலை ஏற்படும். இந்தியாவில், ஊழலை ஒழிக்க, இடது சாரிகள் தற்போது போராட்டத்தை துவங்கியுள்ளனர். அவர்களுடன், பொதுமக்களும் சேர்ந்து ஊழலுக்கு எதிராக போராட வேண்டும்,'' என்றார்.இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us