Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

ADDED : ஜூலை 21, 2011 02:17 AM


Google News

சேந்தமங்கலம் : அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த, கொல்லிமலை வாலிபரை, போலீஸார் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை, பைல்நாடு அக்கரை வளைவை சேர்ந்தவர் அண்ணாதுரை (27). அவர், அரசு அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளதாக, மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி மற்றும் போலீஸார் அண்ணாதுரை வீட்டுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அண்ணாதுரை அனுமதியில்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us