Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஜவுளிக்கான வாட் வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

ஜவுளிக்கான வாட் வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

ஜவுளிக்கான வாட் வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

ஜவுளிக்கான வாட் வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை

ADDED : ஜூலை 21, 2011 01:15 AM


Google News

நாமக்கல்: 'நெசவாளர்களின் நலன் கருதி, ஜவுளிக்கான வாட் வரி விதிப்பை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் தலைவர் சிங்காரம், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட விபரம்:நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் முக்கிய தொழிலாக நெசவுத் தொழில் உள்ளது.

இத்தொழிலுக்கு மூலப்பொருளான பருத்தி நூல், கடந்த ஓராண்டாக தொடர்ந்து அதிகரித்து வந்தபோது, நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். கடந்த இரண்டு மாதங்களில் பருத்தி நூல் வீழ்ச்சியடைந்துள்ளது.நூல் விலை குறைந்துள்ளபோதும், நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக ஜவுளி விற்பனையாகாத நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விசைத்தறி கூடங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளது.

இச்சூழலில், வாட் வரி விதிப்பு ஜவுளி தொழிலுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. நெசவாளர்களின் நலன் கருதி, ஜவுளிக்கு விதித்திருக்கும் வாட் வரியை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us