ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
செஞ்சி : தமிழ்நாடு விவசாயிகள் சங்க பவள விழா கருத்தரங்கம் செஞ்சியில் நடந்தது.
வட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மோகன், குண்டு ரெட்டியார், தனுசு முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் வசுபாலன் வரவேற்றார். மாநில துணை செயலாளர் ஏழுமலை துவக்க உரை நிகழ்த்தினார். மாநில தலைவர் எம். எல்.ஏ., பாலகிருஷ்ணன், விக்கிரவாண்டி எம்.எல். ஏ., ராமமூர்த்தி சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் கோவிந்தசாமி, ஜெயச்சந்திரன், நெடுஞ்சேரலாதன், தாண்டவராயன், ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன், முருகன் உட்பட பலர் பேசினர். வட்ட பொரு ளாளர் வீராசாமி நன்றி கூறினார். நந்தன் வாய்க்கால், வராகநதி சீரமைப்பு திட்டத்தில் நடந்த ஊழல்களை கண்டு பிடிக்க வேண்டும். உபரி நீரை தடுக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.