/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: அரசுக்கு தெரிவிப்பதாக கலெக்டர் உறுதிகப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: அரசுக்கு தெரிவிப்பதாக கலெக்டர் உறுதி
கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: அரசுக்கு தெரிவிப்பதாக கலெக்டர் உறுதி
கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: அரசுக்கு தெரிவிப்பதாக கலெக்டர் உறுதி
கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: அரசுக்கு தெரிவிப்பதாக கலெக்டர் உறுதி
பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அருகே தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிள்ளை செழியன்: கப்பல் கட்டும் தொழிற்சாலை வரும் பட்சத்தில் இந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,: கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு மட்டும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறதா அல்லது பாஸ்பெட் ரசாயன தொழிற்சாலைக்கும் சேர்த்து நடத்தப்படுகிறதா என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். வேலிங்கராயன்பேட்டையில் கட்டப்படும் கப்பல் கட்டும் தொழிற்சாலை அந்த கிராமத்தினருக்கே தகவல் தெரிவிக்காமல் எப்படி கருத்துகேட்பு கூட்டம் நடத்த முடியும். எந்த தகவல்களும் முழுமையாக இல்லாததால் இந்த கூட்டத்தை கலெக்டர் ரத்து செய்ய வேண்டும். செல்வகுமார் பா.ம.க.,: இதுபோன்ற கம்பெனிகள் இந்த பகுதிக்கு வந்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் பாதிக்கும், விவசாயிகளின் நிலங்கள் உவர் நிலமாக மாறிவிடும்.
ம.கம்யூ., கற்பனைச்செல்வம், ரமேஷ் பாபு, அ.தி.மு.க., ஷாஜஹான், மாதவன், இந்திய கம்யூ., சேகர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதற்கு கம்பெனி சார்பில் விளக்கம் கொடுத்தனர். அப்போது பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கூச்சலில் ஈடுப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து பேசியதை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என கலெக்டர் அமுதவல்லி தெரிவித்தார்.கூட்டத்தில் ஆர்.டி.ஓ., இந்துமதி, டி.எஸ்.பி., நடராஜன், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


