ADDED : ஜூலை 15, 2011 12:42 AM
கோபிசெட்டிபாளையம்: நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகள் மணிமேகலை(22).
தனியார் அட்டை கம்பெனியில் வேலை செய்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பங்காரு மகன் சரவணன்(24). கட்டிடத் தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் பெற்றோருக்கு தெரியவந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினர். கோபியில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு கோபி போலீஸில் தஞ்சமடைந்தனர்.