/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/காஸ் சிலிண்டர் பெற கூடுதல் தொகை எதற்கு?காஸ் சிலிண்டர் பெற கூடுதல் தொகை எதற்கு?
காஸ் சிலிண்டர் பெற கூடுதல் தொகை எதற்கு?
காஸ் சிலிண்டர் பெற கூடுதல் தொகை எதற்கு?
காஸ் சிலிண்டர் பெற கூடுதல் தொகை எதற்கு?
ADDED : ஜூலை 13, 2011 02:31 AM
புதூர்:எல்லா விஷயத்திலும் பேரம் பேசும் நாம் காஸ் சிலிண்டருக்கு பில்
தொகைக்கு மேல் 30 முதல் 40 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறோம்.
தராவிடில்
அடுத்தமுறை சிலிண்டர் வர தாமதப்படுத்துவார்களோ? என்ற அச்சம். நம்மிடம்
விழிப்புணர்வு இல்லாததே காரணம்.காஸ் ஏஜென்சிகள் வழங்கியுள்ள ஊதா நிற
புத்தகத்தில் 6 காலங்கள் உள்ளது. இதை 90 சதவீதம் பேர்
பயன்படுத்துவதேயில்லை. இதில் வரிசை எண், காஸ் பதிவு செய்தபின் காத்திருப்பு
எண் மற்றும் உத்தேசமாக காஸ் வினியோகிக்கப்படும் நாள், சிலிண்டர் பெறும்
ரசீது எண், காஸ் விநியோகிக்கப்பட்ட நாள், டெலிவரி செய்யும் ஊழியரின்
கையொப்பம், நுகர்வோர் கையொப்பம் ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்யவேண்டும்.
இதை பின்பற்றினால் தவறுகளை தவிர்க்க முடியும் முன்னெச்சரிக்கையாக சில
ஏஜன்சிகள் வாடிக்கையாளர்களின் காஸ் இணைப்பு எண் ஸ்டிக்கர் கொடுத்துள்ளனர்.
இதில் வாடிக்கையாளர்களின் கையெழுத்திட்டு சிலிண்டரை வேறொருவருக்கு
மாற்றிவிடும் முறைகேடு தடுக்கப்படும். சிலிண்டரை எடைபோட்டு வாங்க வேண்டும்.
ஏஜன்சிகளால் செல்லமுடியாத தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள், நேரடியாக
சிலிண்டர் பெறலாம். அவர்களுக்கு எட்டு ரூபாய் மானியம் உண்டு. அவர்கள் ரூ.80
பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் கையெழுத்து வாங்கி ஏஜன்சிகளிடம் சமர்ப்பிக்க
வேண்டும். இனாம் கொடுக்கவும் தேவையில்லை. இது ஏஜன்சி ரசீதின் கீழ்
குறிப்பிடப்பட்டுள்ளது. காஸ் முன் பதிவு செய்ய எஸ்.எம்.எஸ்.அனுப்பலாம்.
காஸ் விநியோகத்தில் குறைகள் ஏற்பட்டால் ஏஜன்சியில் புகார் செய்யலாம்.
தீர்வு கிடைக்காவிடில் காஸ் விற்பனை உயரதிகாரிகள், மாவட்ட வழங்கல்
அலுவலரிடம் முறையிடலாம்.


