Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நேதாஜி சாலையில் கனரக வாகனங்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுமா?

நேதாஜி சாலையில் கனரக வாகனங்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுமா?

நேதாஜி சாலையில் கனரக வாகனங்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுமா?

நேதாஜி சாலையில் கனரக வாகனங்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுமா?

ADDED : ஜூலை 13, 2011 01:41 AM


Google News
கடலூர் : கடலூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நேதாஜி சாலையில் கனரக வாகன போக்குவரத்தை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். கடலூரில் வாகன போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.

இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இந்நிலையில் தற்போது பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக கனரக வாகனங்கள் முழுவதும் செம்மண்டலம் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிம்மதியாக சென்று வருகின்றனர். தற்போதுள்ள சாலையில் மீண்டும் பஸ், லாரி போன்ற வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்பட்டால் மீண்டும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனவே கனரக வாகன ஓட்டிகள் பழகிவிட்ட செம்மண்டலம் புறவழிச்சாலையில் தொடர்ந்து இயக்க வேண்டும். நேதாஜி சாலையில் இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us