/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/"மாஜி' ராணுவ கேப்டன் வீட்டில் ரூ. மூன்று லட்சம் நகை கொள்ளை"மாஜி' ராணுவ கேப்டன் வீட்டில் ரூ. மூன்று லட்சம் நகை கொள்ளை
"மாஜி' ராணுவ கேப்டன் வீட்டில் ரூ. மூன்று லட்சம் நகை கொள்ளை
"மாஜி' ராணுவ கேப்டன் வீட்டில் ரூ. மூன்று லட்சம் நகை கொள்ளை
"மாஜி' ராணுவ கேப்டன் வீட்டில் ரூ. மூன்று லட்சம் நகை கொள்ளை
ADDED : ஜூலை 12, 2011 12:12 AM
தஞ்சாவூர்: திருவையாறில் ஓய்வு பெற்ற ராணுவ 'கேப்டன்' வீட்டின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (68). ஓய்வு பெற்ற ராணுவ கேப்டனான இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாயை திருடிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கலியமூர்த்தி (50) என்பவர் மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால், அந்த மர்ம நபர் கலியமூர்த்தியை தாக்கிவிட்டு, தான் வந்த சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு பணம், நகைகளுடன் தப்பியோடி விட்டார். இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாயாகும். திருவையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.