/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க., வேட்பாளருக்கு ரூ.21 லட்சத்துக்கு சொத்துஅ.தி.மு.க., வேட்பாளருக்கு ரூ.21 லட்சத்துக்கு சொத்து
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ரூ.21 லட்சத்துக்கு சொத்து
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ரூ.21 லட்சத்துக்கு சொத்து
அ.தி.மு.க., வேட்பாளருக்கு ரூ.21 லட்சத்துக்கு சொத்து
சேலம்: சேலம் மாநகராட்சியில், அ.தி.மு.க., சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிடும் சவுண்டப்பனின் சொத்து மதிப்பு, 21 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்.
அவருடைய சொத்து விபரம்: சவுண்டப்பனிடம் ரொக்கம் கையிருப்பு, 2 லட்சம் ரூபாய், மனைவி பெயரில், 2 லட்சம் ரூபாய், சிண்டிகேட், எஸ்.பி.ஐ., வங்கியில் இருப்பு, 28 ஆயிரத்து, 237 ரூபாய். 2010 மாடல் கொண்ட இரு சக்கர வாகனம், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்ளது. அவரிடம், ஐந்து பவுன் நகை, மனைவியிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான, 20 பவுன் நகை.
மனைவி பெயரில், தாதகாப்பட்டியில், 1,067 சதுர அடி விவசாய மற்ற நிலம் உள்ளது. அதன் மதிப்பு, இரண்டு லட்சத்து, 92 ஆயிரம் ரூபாய். மேலும், நான்கு லட்சம் ரூபாய் மதிப்புடைய, 600 சதுர அடி, ஒரு லட்சத்து, 10 ஆயிரம் மதிப்புடைய, 250 சதுர அடி கொண்ட கட்டிடங்கள், மனைவி பெயரில் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான, 350 சதுர அடி கட்டிடம் உள்ளது. அவை இரண்டு லட்சம் ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என, மொத்தம்ல 21 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.