/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/5 வீடுகளுக்கு தீ வைப்பு கடையம் அருகே பரபரப்பு5 வீடுகளுக்கு தீ வைப்பு கடையம் அருகே பரபரப்பு
5 வீடுகளுக்கு தீ வைப்பு கடையம் அருகே பரபரப்பு
5 வீடுகளுக்கு தீ வைப்பு கடையம் அருகே பரபரப்பு
5 வீடுகளுக்கு தீ வைப்பு கடையம் அருகே பரபரப்பு
ADDED : செப் 27, 2011 12:42 AM
ஆழ்வார்குறிச்சி : கடையம் அருகே மந்தியூரில் 5 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.கடையம் அருகேயுள்ள மந்தியூரில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கோயில் தகராறில் ஜெகநாதன் மகன் சந்திரசேகர் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதில் மாடசாமி என்பவரின் மகன்கள் முருகன் (28), காளிதாஸ் (27), மாரிராஜ் (35) உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முருகன், காளிதாஸ், மாரிராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக ஜெகநாதன் குடும்பத்தினருக்கும், மாடசாமி குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாடசாமி (75), சமுத்திரக்கனி (30), கோமதியம்மாள் (50) ஆகியோர் வீடுகளுக்கு ஜெகநாதன், துரைச்சாமி, முருகன், நாட்டாண்மை தெய்வேந்திரன், பொன்னம்மாள், ஏ.கே.முருகன், ரெங்கன் (எ) ரெங்கநாதன், தேவிகா, மகாதேவன், காஞ்சனா, சுப்பிரமணியன், அந்தோணியம்மாள், சுடலையாண்டி, மாரியப்பன், ராகவேந்திரன், சோனியா, இந்திரா, உதயக்குமார், சைலப்பன், மற்றொரு முருகன், கோவிந்தன், வேலம்மாள் உட்பட 23 பேர் அரிவாள், கம்புடன் வீட்டிற்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கி டி.வி. பீரோ, ரேஷன் கார்டு உட்பட பல பொருட்களை தீ வைத்து கொளுத்தி சேதப்படுத்தினர்.
இதில் மாடசாமி வீட்டில் சுமார் ரூ.54 ஆயிரம் மதிப்பிலும், சமுத்திரகனி வீட்டில் சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலும், கோமதியம்மாள் வீட்டில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலும் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மாடசாமி, சமுத்திரக்கனி, கோமதியம்மாள் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை அம்பை டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம், தாசில்தார் தியாகராஜன், மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் துரைராஜ், விஏஓ முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.ஒரே கிராமத்தில் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலைமையில் ஊருக்குள் ஆண்கள் ஒருவரும் இல்லை. மந்தியூரில் அதிரடிப்படை மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.