/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பாஞ்சாலியூரில் சீரான குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியல்பாஞ்சாலியூரில் சீரான குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியல்
பாஞ்சாலியூரில் சீரான குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியல்
பாஞ்சாலியூரில் சீரான குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியல்
பாஞ்சாலியூரில் சீரான குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து அந்த பகுதியில் வசிப்போர் மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாஞ்சாலியூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை பாஞ்சாலியூர் அருகே காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் எல்லப்பன் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாஞ்சாலியூருக்கு தனியாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.