/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அறிவியல் வினாடி-வினா போட்டிகள் :சாதித்த மாணவியருக்கு சிறப்பு பரிசுஅறிவியல் வினாடி-வினா போட்டிகள் :சாதித்த மாணவியருக்கு சிறப்பு பரிசு
அறிவியல் வினாடி-வினா போட்டிகள் :சாதித்த மாணவியருக்கு சிறப்பு பரிசு
அறிவியல் வினாடி-வினா போட்டிகள் :சாதித்த மாணவியருக்கு சிறப்பு பரிசு
அறிவியல் வினாடி-வினா போட்டிகள் :சாதித்த மாணவியருக்கு சிறப்பு பரிசு
ADDED : செப் 10, 2011 01:50 AM
ஊட்டி : ஊட்டியில் துளிர் மற்றும் ஜந்தர், மந்தர் அறிவியல் வினாடி வினா
போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல்
இயக்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் அறிவியல் வினாடி வினா போட்டி நிகழ்ச்சி
நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும்,
மாவட்ட அணிகளை தேர்வு செய்ய துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடி
வினா போட்டிகள் ஊட்டியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பெள்ளி முன்னிலை வகித்தார்.
மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் போட்டிகளை துவக்கி வைத்து
பேசினார். நீலகிரி மாவட்டத்தில் இருந்து 25 பள்ளிகளை சேர்ந்த 150க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய 3 பிரிவுகளில்
நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். நடுநிலைப்பிரிவில் குன்னூர் ஸ்டேன்ஸ்
பள்ளி, கூடலூர் பாத்திமா பள்ளிகள் முதலிடத்தையும், ஐடியல் பள்ளி, கூடலூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2ம் இடத்தையும், குன்னூர் புல்மோர் பள்ளி,
கெரடாமட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 3வது இடத்தையும் பெற்றன.
உயர்நிலைப்பள்ளியில் கூடலூர் புனித பாத்திமா, ஜி.டி.எம்.ஓ., பள்ளிகள்
முதலிடத்தையும் குன்னூர் புல்மோர், கூடலூர் பாத்திமா பள்ளி இரண்டாம்
இடத்தையும், அகலார் குருகுலம் பள்ளி, குன்னூர் புனித மரியன்னை பள்ளிகள்
3வது இடத்தையும் பெற்றன. மேல்நிலைபிரிவில் குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி மற்றும்
கூடலூர் ஜி.டி.எம்.ஓ., பள்ளிகள் முதலிடத்தையும் கூடலூர் புனித தாமஸ் பள்ளி
இரண்டாம் இடத்தையும் கூடலூர் பாத்திமா, குன்னூர் புனித மரியன்னை பள்ளிகள்
3வது இடத்தையும் பெற்றன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீலகிரி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் அரங்கநாதன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு இயக்க மாவட்ட செயலாளர் ராஜு வரவேற்றார். தலைமையாசிரியர் மனோகரன்
நன்றி கூறினார். தலைமையாசிரியர் தேவன், கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி
முதல்வர் மாத்யூ உட்பட பலர் பங்கேற்றனர்.