விருதுநகர்:கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக வி.ஏ.ஓ., சான்று
பெறுவதை ரத்து செய்யக்கோரி ஏ.ஐ.டி.
யு.சி., கட்டுமான தொழிலாளர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். துணை செயலாளர் கோவிந்தன்
மாட்ட குழு உறுப்பினர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள்
எம்.எல்.ஏ., ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.