/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/இலவச ஆடு, மாடு கொள்முதல்: திருவாரூர் கலெக்டர் நேரில் ஆய்வுஇலவச ஆடு, மாடு கொள்முதல்: திருவாரூர் கலெக்டர் நேரில் ஆய்வு
இலவச ஆடு, மாடு கொள்முதல்: திருவாரூர் கலெக்டர் நேரில் ஆய்வு
இலவச ஆடு, மாடு கொள்முதல்: திருவாரூர் கலெக்டர் நேரில் ஆய்வு
இலவச ஆடு, மாடு கொள்முதல்: திருவாரூர் கலெக்டர் நேரில் ஆய்வு
திருவாரூர் : தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏழை குடும்பத்தினருக்கு இலவசமாக கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த ஆய்வு குறித்து திருவாரூர் கலெக்டர் முனியநாதன் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழைகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் தமிழகத்தின் பால் உற்பத்தியை பெருக்கிடவும், கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் திட்டமிட்டு இலவசமாக ஏழை குடும்பங்களுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வழங்க திட்டமிட்டு, கறவை மாடுகளை ஆந்திர மாநிலம் அனந்தபூர் கிராமத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை திருவாரூர் மாவட்டத்திற்கு 30 கறவை பசுக்களும், 120 ஆடுகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆடுகளை பொருத்தவரை தமிழகத்தில் சந்தைகளுக்குள்ளும், மாடுகள் ஆந்திர மாநிலத்திலும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மாடுகள் கொள்முதலில் மூன்று வேளை கறந்து பார்த்து பல் மற்றும் கொம்புகளில் வயது பருவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு மருத்துவர்களுடன் சென்று கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்டவைகளை நாடாக்குடியிலும், கோட்டூரிலும் ஆய்வு செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட ஆடு மற்றும் மாடுகள் திருப்திகரமாக உள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறினார். ஆய்வின்போது மண்டல இணை இயக்குனர் அருள்மணி, உதவி இயக்குனர் மதனகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.