/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீபாவளி போனஸ் கிடைக்குமா? பனியன் தொழிலாளர்கள் ஏக்கம்தீபாவளி போனஸ் கிடைக்குமா? பனியன் தொழிலாளர்கள் ஏக்கம்
தீபாவளி போனஸ் கிடைக்குமா? பனியன் தொழிலாளர்கள் ஏக்கம்
தீபாவளி போனஸ் கிடைக்குமா? பனியன் தொழிலாளர்கள் ஏக்கம்
தீபாவளி போனஸ் கிடைக்குமா? பனியன் தொழிலாளர்கள் ஏக்கம்
திருப்பூர் : கடந்த சில மாதங்களாக, திருப்பூர் பின்னலாடை தொழில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தீபாவளி போனஸ் கிடைக்குமா என பனியன் தொழிலாளர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த அளவு வேலை இல்லாவிட்டாலும், குறைந்த அளவு கிடைக்கிறது. இருப்பினும், கடந்த ஜன., மாதம் பெற வேண்டிய கூலி உயர்வை, இதுவரை பெற முடியாமல் தவிக்கின்றனர். சாயத்தொழில் பிரச்னையால், பனி யன் தொழில் ஸ்தம்பித்துள்ளதே, கூலி உயர்வு பெற முடியாததற்கு முக்கிய காரணம். இதனால், தொழிற்சங்கத்தரப்பிலும் நிர்பந்தப்படுத்தி, கூலி உயர்வு பெற்றுக் கொடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
தீபாவளிக்கு இரண்டு மாதங்களே உள்ளது. எனவே, வழக்கம்போல் பிரச்னையின்றி போனஸ் வழங்கப்படுமா என்று தொழிலாளர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில், கடந்த ஜன., மாதத்தில் இருந்து சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், வழக்கமான உற்பத்தியில் 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், தீபாவளி போனஸ் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்று தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர்.
எல்.பி.எப்., பொது செயலாளர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''தொழில் பிரச்னைக்கும், போனஸ் பெறுவதற்கும் சம்பந்தமில்லை. ஒவ்வொரு தொழிலாளியும், ஓராண்டில் வேலை செய்த அளவுக்கு, சதவீத அடிப்படையில் போனஸ் பெறலாம். கடந்த சில மாதங்களாக தொழிலாளர்கள் பெற்ற சம்பள அடிப்படையில், போனஸ் வழங்கப்படும். போனஸ் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டால், எல்.பி.எப்.. தொழிற்சங்கம் களம் இறங்கி, பேச்சு மூலமாக, நியாயமான போனஸ் பெற்றுத்தரும்,'' என்றார்.