/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அடிப்படை வசதிகள் இல்லை காலியான போலீஸ் குடியிருப்புஅடிப்படை வசதிகள் இல்லை காலியான போலீஸ் குடியிருப்பு
அடிப்படை வசதிகள் இல்லை காலியான போலீஸ் குடியிருப்பு
அடிப்படை வசதிகள் இல்லை காலியான போலீஸ் குடியிருப்பு
அடிப்படை வசதிகள் இல்லை காலியான போலீஸ் குடியிருப்பு
ADDED : ஆக 21, 2011 11:38 PM
பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி போலீஸ் குடியிருப்பில் வீடுகள் பழுதடைந்தும், அடிப்படை வசதிகள் இன்றியும் உள்ளதால், படிப்படியாக வீடுகளை காலி செய்துவருகின்றனர்.
பட்டிவீரன்பட்டி போ லீஸ் ஸ்டேஷன் எதிரே போலீசாருக்கு குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 16 வீடுகளும் சுவர்கள், கூரைகள் சேதமடைந்துள்ளன. மழைகாலங்களில் சுவர்களில் நீர்கசிவு இருப்பதால், மின் கசிவு ஏற்படுகிறது. இதனால் சுவர்களை தொட்டாலே 'ஷாக்' அடிக்கிறது. 16 குடும்பங்கள் வசித்த இடத்தில் தற்போது மூன்று குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர். மற்றவர்கள் ஊருக்குள், கூடுதல் வாடகை கொடுத்து வசிக்கின்றனர். போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வசதி செய்துதர பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கைஇல்லை. குடியிருப்பிற்கு அருகிலேயே எம்.வாடிப்பட்டிக்கு மருதாநதி அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன. இதிலிருந்து நீர் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து உள்ளது. ஸ்டேஷனுக்கு வரும் உயர் அதிகாரிகளிடம் போலீசாரின் மனைவிகள் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மாவட்ட போலீஸ் நிர்வாகம், பட்டிவீரன்பட்டி போலீஸ் குடியிருப்பை புதுப்பித்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும்.


