Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/வீட்டு கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை அபேஸ்

வீட்டு கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை அபேஸ்

வீட்டு கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை அபேஸ்

வீட்டு கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை அபேஸ்

ADDED : ஆக 21, 2011 02:24 AM


Google News

மன்னார்குடி: கூத்தாநல்லூர் அருகில் உள்ள மரக்கடை கிராமத்தில் வீட்டின் பின் கதவை உடைத்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பு உள்ள நகைகள் மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மரக்கடை கிராமத்தை சேர்ந்தவர் சிவநேசன் (50). இவர் அத்திக்கடை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி (42). கொரடாச்சேரி அரசு பள்ளியில் உதவி தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இருவரும் காலையில் பள்ளிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுடன் கதவை திறந்து உள்ளே சென்ற பார்த்த போது பின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், 5,100 ரொக்க பணம், கை கடிகாரம் ஆகியவை திருட்டு போயிருந்தது அறிந்து கூத்தாநல்லூர் போலீஸில் ஆசிரியர் சிவநேசன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.ஐ., ராஜேந்திரன் ஆகிய சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us