Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி வேன் கவிழ்ந்தது25 மாணவர்கள் தப்பினர்

பள்ளி வேன் கவிழ்ந்தது25 மாணவர்கள் தப்பினர்

பள்ளி வேன் கவிழ்ந்தது25 மாணவர்கள் தப்பினர்

பள்ளி வேன் கவிழ்ந்தது25 மாணவர்கள் தப்பினர்

ADDED : ஆக 19, 2011 03:49 AM


Google News
விழுப்புரம்:வளவனூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் டிரைவர் உட்பட 25 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.விழுப்புரம் அடுத்த வளவனூரில் உள்ள தனியார் பள்ளி வேன் நேற்று கிராமப் புறங்களில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் குடுமியான் குப்பம் ஆஞ்சநேயர் கோவில் அருகே காலை 9. 30 மணிக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை வேன் டிரைவர் முந்த முயன்றதால் நிலைத்தடுமாறிய வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கிய டிரைவர் உட்பட 25 மாணவர்களையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வேன் டிரைவர்கள் அதிவேகத்தை குறைத்து, நிதானத்தை கடைபிடிக்க வேண்டுமென குழந்தைகளின் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us