/உள்ளூர் செய்திகள்/மதுரை/திருமங்கலம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைக்கு சீல்திருமங்கலம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைக்கு சீல்
திருமங்கலம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைக்கு சீல்
திருமங்கலம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைக்கு சீல்
திருமங்கலம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைக்கு சீல்
ADDED : ஆக 17, 2011 02:46 AM
திருமங்கலம் : திருமங்கலம் அருகே குன்னனம்பட்டியில் அனுமதியின்றி,
கண்மாய்க்குள் செயல்பட்ட சாயப்பட்டறைக்கு சீல் வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணாராம் உத்தரவுப்படி,
வருவாய்த்துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது,
10 நாட்களாக சாயப்பட்டறை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. திருப்பூரைச்
சேர்ந்த ரவிச்சந்திரன் வாடகை நிலத்தில் இதனை நடத்தி வந்தார் .
சாயப்பட்டறைக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ரவிச்சந்திரனிடம், 'இனிமேல் மதுரை
மாவட்டத்திற்குள் சாயப்பட்டறை நடத்த மாட்டேன்,' என்று எழுதி வாங்கிக்
கொண்டனர். இதுவரை மதுரை மாவட்டத்தில் 15 இடங்களில் சாயப்பட்டறைகள் சீல்
வைக்கப்பட்டுள்ளன