/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மின்சாரம் பாய்ச்சி விவசாயி கொலை வி.ஏ.ஓ.,க்கு ஆயுள் தண்டனைமின்சாரம் பாய்ச்சி விவசாயி கொலை வி.ஏ.ஓ.,க்கு ஆயுள் தண்டனை
மின்சாரம் பாய்ச்சி விவசாயி கொலை வி.ஏ.ஓ.,க்கு ஆயுள் தண்டனை
மின்சாரம் பாய்ச்சி விவசாயி கொலை வி.ஏ.ஓ.,க்கு ஆயுள் தண்டனை
மின்சாரம் பாய்ச்சி விவசாயி கொலை வி.ஏ.ஓ.,க்கு ஆயுள் தண்டனை
காஞ்சிபுரம் : விவசாயியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்த, கிராம நிர்வாக அலுவலருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் அடுத்த சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்,54.
அப்போது, சண்முகத்தின் நிலத்திற்குச் சென்ற, மின் ஒயர் பழுதடைந்திருப்பதைக் கண்டார்.சண்முகத்திடம் ஒயர் பழுதடைந்துள்ளதால், மின் சப்ளை கொடுக்க வேண்டாம், எனக் கூறியுள்ளார். ஆனால் சண்முகம், பழைய பகையை மனதில் வைத்திருந்து, ரவி வேலை செய்யும்போது, மின் இணைப்புக் கொடுத்துள்ளார்.ரவி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்து, ரவி மனைவி கமலவேணி, காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சண்முகம், பார்த்தசாரதி ஆகியோரை கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்ட கோர்ட் இரண்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சித்தார்த்தர் விசாரித்தார்.விசாரணை முடிவில், சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பார்த்தசாரதியை விடுதலை செய்தார். அரசுத் தரப்பில், வழக்கறிஞர் சம்பத் ஆஜரானார்.


