/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எஸ்டேட்டில் சிறுத்தை: தொழிலாளர்கள் பீதிஎஸ்டேட்டில் சிறுத்தை: தொழிலாளர்கள் பீதி
எஸ்டேட்டில் சிறுத்தை: தொழிலாளர்கள் பீதி
எஸ்டேட்டில் சிறுத்தை: தொழிலாளர்கள் பீதி
எஸ்டேட்டில் சிறுத்தை: தொழிலாளர்கள் பீதி
ADDED : ஆக 03, 2011 01:34 AM
வால்பாறை : வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்ததால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மூன்று இடங்களில் கூண்டு வைத்தும், இது வரை சிக்கவில்லை. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட்டில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சிறுத்தை வந்தது. குடியிருப்பு பகுதியில் இருந்த இரண்டு கோழிகளை பிடித்துச் சென்றது. பொதுமக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியில் பகல் நேரத்திலேயே சிறுத்தை அடிக்கடி வந்து செல்வதால், குழந்தைகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


