Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/நிருபர் மீது தாக்குதல் நான்கு பேர் கைது

நிருபர் மீது தாக்குதல் நான்கு பேர் கைது

நிருபர் மீது தாக்குதல் நான்கு பேர் கைது

நிருபர் மீது தாக்குதல் நான்கு பேர் கைது

ADDED : ஜூலை 15, 2011 10:10 PM


Google News

மூணாறு : மூணாறில் மலையாள தொலைகாட்சி நிருபரை தாக்கிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

மூணாறில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருவதால்,இது குறித்து செய்திகள் சேகரிப்பதற்காக கேரளாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிருபர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்களில் சிலர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட சென்றபோது,அங்கிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ரிப்போர்டர் எனும் மலையாள தொலைகாட்சியின் நிருபர் அனிஷ்குமார் தாக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்காக சித்திராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மூணாறு காலனியைச் சேர்ந்த சாம்(22),சுரேஷ்(24),குணசிங்(28),யூனிஷ்(28) ஆகியோரை இன்ஸ்பெக்டர் ஷியாம்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us