/உள்ளூர் செய்திகள்/சேலம்/குண்டும் குழியுமாக மாறிய சீத்தாராம செட்டி சாலைகுண்டும் குழியுமாக மாறிய சீத்தாராம செட்டி சாலை
குண்டும் குழியுமாக மாறிய சீத்தாராம செட்டி சாலை
குண்டும் குழியுமாக மாறிய சீத்தாராம செட்டி சாலை
குண்டும் குழியுமாக மாறிய சீத்தாராம செட்டி சாலை
சேலம் : சேலம் சீத்தாராம செட்டி சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகனங்கள் தடுமாறி செல்கின்றன.
இந்த சாலையில் சிவில் சப்ளை குடோன் உள்ளது. இங்கிருந்து அரிசி, கோதுமை உள்பட ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால், சிவில் சப்ளை குடோன் வளாகத்தை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், லாரிகள் அதிக லோடுடன் வெளியே வரும் போது, பாடாவதியான சாலையில் லாரிகள் சிக்கி திணறுகின்றன. சாலையின் ஒரு புறத்தில் பழைய இரும்பு கம்பி கடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு பணிபுரிவோர் சாலையில் வருவோரை பொருட்படுத்தாமல், கம்பிகளை வளைத்து, மற்ற இடங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுகின்றனர். சில கடைகளில் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், சாலையில் செல்வோரை பதம் பார்க்கும் நிலை உள்ளது. சீத்தாராம செட்டி சாலை வழியே ஏராளமான டெம்போ, வேன்கள், லாரிகள் சென்று வருவதால், இந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், புதிய சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.