/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தினர் கோரிக்கைசிவில் இன்ஜினியர்கள் சங்கத்தினர் கோரிக்கை
சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தினர் கோரிக்கை
சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தினர் கோரிக்கை
சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தினர் கோரிக்கை
ADDED : ஆக 01, 2011 10:51 PM
பொள்ளாச்சி : செங்கல் விலையும், ஜல்லி விலையும் குறையாமல் பழைய விலையே நீடித்து வருவதாக, பொள்ளாச்சி தாலுகா சிவில் இன்ஜினியர்கள் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில், தாலுகா சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் கூட்டம் நடந்தது. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் ஞானபிரகாசம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்கத்திற்கான புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். நாளிதழ்களில், ஒரு செங்கல் லோடு மூவாயிரம் ரூபாயும், இரண்டு யூனிட் ஜல்லிக்கு 700 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகின்றன. ஆனால், நடைமுறையில் இவற்றின் விலை குறையவில்லை. அரசுக்கும், பொதுமக்களுக்கும் இது குறித்து தெரியப்படுத்த வேண்டும். சிமென்ட் விலை தற்போது 340 ரூபாய்க்கு விற்கிறது. இதை 240 ரூபாயாக குறைக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், இதுவரை குறைக்கப்படவில்லை. இது குறித்து அரசுக்கு வலியுறுத்தப்பட வேண்டும். தற்போது, தரமான வீடுகள் கட்ட குறைந்தபட்சம் சதுரடிக்கு ஆயிரத்து 400 ரூபாய் வீதம் தேவையாக உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க வேண்டும். மேலும், சங்கம் மூலம் பதிவு பெற்ற இன்ஜினியர்களை கொண்டு மட்டுமே வீடுகளை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.