/உள்ளூர் செய்திகள்/மதுரை/பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்
பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்
பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்
பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க மானியம்
மதுரை : ''தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கீழ் பெண்கள், திருநங்கைகள் தொழில் துவங்க, கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது'', என கிளை மேலாளர் அருணாச்சல ராஜன் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று நடந்த கடன் முகாமில் அவர் கூறியதாவது: மாநில அரசின் மூலம் தொழில் துவங்க கடன்களும், மானியமும் வழங்கப்படுகிறது.
பத்து லட்சம் வரை தொழில் துவங்க, 75 சதவீத கடனும், அதற்கு மேல் எனில் மூன்றில் இரண்டு பங்கு தொகை கடனாக தரப்படுகிறது. 50 முதல் 100 சதவீதம் வரை சொத்துப் பிணையம் தேவை. முழுமையான தொழில் அனுபவம் உடையவர்கள் தொழில் செய்ய பணம் தடையாக இருந்தால், 90 சதவீதம் வரை கடன் தரப்படுகிறது. குறைந்தது 25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ஐந்து லட்ச ரூபாய் வரை, சொத்துப் பிணையம் தேவையில்லை. மாதந்தோறும் சமமான தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். மதுரையில் மேற்கு மற்றும் மேலூர் தவிர, பிற இடங்களில் தொழில் துவங்கினால் மானியக் கடன் பெறலாம், என்றார். போன்: 0452 - 253 3331.


