/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சேமிப்பு கிடங்கு ஊழியர் சங்கம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கைசேமிப்பு கிடங்கு ஊழியர் சங்கம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
சேமிப்பு கிடங்கு ஊழியர் சங்கம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
சேமிப்பு கிடங்கு ஊழியர் சங்கம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
சேமிப்பு கிடங்கு ஊழியர் சங்கம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
ADDED : ஆக 09, 2011 02:43 AM
விழுப்புரம் : தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன அம்பேத்கர் ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாநில துணை பொது செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார்.
பொது செயலாளர் மணிவேலு வரவேற்றார். மாநில தலைவர் மணி, பொருளாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர்.தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெ., விற்கு வாழ்த்துகள் தெரிவித்தும், இந்நிறுவனத்திற்கு மக்கள் தொடர்பு அதிகாரி பதவியை அரசு உருவாக்க வேண்டும். காலியாக உள்ள மேலாண் இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சேமிப்பு கிடங்கு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், பணியின் போது இறக்கும் தொழிலாளர்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பொதுக்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் நன்றி கூறினர்.


