Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் நிச்சயம் : அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர்

புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் நிச்சயம் : அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர்

புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் நிச்சயம் : அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர்

புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் நிச்சயம் : அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர்

ADDED : அக் 13, 2011 12:40 AM


Google News

ராமநாதபுரம் : 'ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்து நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படும்' என, தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் பேசினார்.

ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோயில் பகுதியில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: ஜெ., நல்லாட்சியில், பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நான் தலைவரானால் கூடுதல் நிதி பெற்று தேவையான வசதிகளை தடையின்றி செய்வேன். அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் விரைவாக செய்வேன். பாதியில் நிற்கும் திட்டப்பணிகளை உடனடியாக முடிப்பேன். தென்புறம் உள்ள டிப்போ இடத்தை நகராட்சிக்கு பெற்று, புதிய பஸ் ஸ்டாண்டை நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்வேன். குடிநீர், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன், என்றார். தொகுதி செயலாளர் முருகேசன், இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், நகர் செயலாளர் அங்குச்சாமி, நகராட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி சாமிநாதன், வார்டு வேட்பாளர்கள் இந்திராமேரி, வாசுகி உடன் சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us