/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/குழந்தைகளின் பிரச்னை குறித்து விவாதிக்க கர்நாடகாவை போல கிராம சபா கூட்டங்கள்குழந்தைகளின் பிரச்னை குறித்து விவாதிக்க கர்நாடகாவை போல கிராம சபா கூட்டங்கள்
குழந்தைகளின் பிரச்னை குறித்து விவாதிக்க கர்நாடகாவை போல கிராம சபா கூட்டங்கள்
குழந்தைகளின் பிரச்னை குறித்து விவாதிக்க கர்நாடகாவை போல கிராம சபா கூட்டங்கள்
குழந்தைகளின் பிரச்னை குறித்து விவாதிக்க கர்நாடகாவை போல கிராம சபா கூட்டங்கள்
ADDED : அக் 05, 2011 12:09 AM
நாகர்கோவில் : கர்நாடக மாநிலத்தில் உள்ளது போன்று தமிழகத்தில் குழந்தைகளின் பிரச்சனைகள், பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து விவாதிக்க சிறப்பு கிராமசபா கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குழந்தைகள் பார்லி கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகம்-புதுச்சேரி மாநில குழந்தைகள் பார்லி., சிறப்பு கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது.
இதில் தேர்வு பெற்று பிரதமர், மற்றும் அமைச்சர்கள் நாகர்கோவில் வந்தனர்.நாகர்கோவிலில் குழந்தைகள் பாரளுமன்ற பிரதமர் முத்துசெல்வ கணேஷ், போக்குவரத்துத்துறை அமைச்சர் அரவிந்த், உணவுத்துறை அமைச்சர் சாரதி, கல்வித்துறை அமைச்சர் நதியா, மாற்றுதிறனாளி துணை அமைச்சர் பைஜூ ஆகியோர் கூறியதாவது:குழந்தைகள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக கர்நாடகத்தில் உள்ளது போன்று தமிழகத்தில் குழந்தைகள் பிரச்னைகள், பாதுகாப்பு, முன்னேற்றம், மனமகிழ்வு இதனை குறித்து சிறப்பு கிராமசபா கூட்டங்கள் நடத்த வேண்டும். குழந்தைகள் முன்னேற்ற திட்டங்கள் குறித்து கிரமசபா கூட்டத்தில் அறிவிக்கவேண்டும். பெரியவர்களுக்கு உள்ளது போன்று குழந்தைகளுக்கும் தனியாக பஞ்., அமைப்புகள் தேவை. கேரளாவை போன்று மக்கள் இணைந்து திட்டமிடும் முயற்சிகள் ஊராட்சிகளில் செயல்படுத்தவேண்டும். குழந்தைகளை சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபடுத்த ஊராட்சிகள் ஊக்கம் தரவேண்டும். இயற்கை உரங்களை ஊக்குவிக்க சிறப்புக்குழுக்கள் செயல்படுத்தவேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குழு, மற்றும் கண்காணிப்புகுழு உருவாக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களுக்கென நூலகம் அமைக்கப்படவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கென தனித்தனிகழிப்பறை அமைக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி சுனு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


