புதையல் ஆசை காட்டி பணம் பறிப்பு : போலி சாமியார் உட்பட 7 பேர் கைது
புதையல் ஆசை காட்டி பணம் பறிப்பு : போலி சாமியார் உட்பட 7 பேர் கைது
புதையல் ஆசை காட்டி பணம் பறிப்பு : போலி சாமியார் உட்பட 7 பேர் கைது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே, புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி பணம் பறித்த, பெங்களூரை சேர்ந்த சாமியார் உட்பட ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர்.
இதை நம்பிய சரவணன், 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாகத் தந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அமாவாசை என்பதால், அன்று புதையல் எடுக்க, தன்னுடைய சீடர்களுடன் ஜெகதேவி வருவதாக, சாமியார் தகவல் அளித்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து, அழைத்துச் செல்லுமாறு, சாமியார் சரவணனிடம் தெரிவித்தார். இரவு 10 மணிக்கு, இண்டிகா கார் மற்றும் இரு பைக்குகளில், ஆறு பேருடன் வந்து இறங்கிய சாமியார், மீதமுள்ள 90 ஆயிரம் ரூபாயைத் தரும்படி சரவணனிடம் கேட்டார். புதையலை எடுத்துக் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளும்படி, சரவணன் கூறினார்.
இதனால், சரவணனுக்கும், பெங்களூரில் இருந்து வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்தவர்கள், கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகராறில் ஈடுபட்ட கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்ய முயன்றது தெரிந்து, ஏழு பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த இண்டிகா கார் மற்றும் இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.