Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் கொலு போட்டி தினமலர் நாளிதழ் நடத்துகிறது

விழுப்புரத்தில் கொலு போட்டி தினமலர் நாளிதழ் நடத்துகிறது

விழுப்புரத்தில் கொலு போட்டி தினமலர் நாளிதழ் நடத்துகிறது

விழுப்புரத்தில் கொலு போட்டி தினமலர் நாளிதழ் நடத்துகிறது

ADDED : செப் 27, 2011 11:38 PM


Google News

விழுப்புரம் : தினமலர் நாளிதழ் சார்பில் விழுப்புரம் நகரில் கொலு போட்டி நாளை (29ம் தேதி) நடக்கிறது.தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டு தோறும் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நவராத்திரி விழாவையொட்டி கொலு போட்டி நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டும் பல்வேறு இடங்களில் கொலு போட்டி நடத்தப்படுகிறது.விழுப்புரத்தில் நாளை (29ம் தேதி) மாலை 6 மணி முதல் கொலு வைத்து பெயர் பதிந்தவர்களின் வீடுகளுக்கு நடுவர் குழுவினர் வந்து கொலுவை பார்வையிட்டு தேர்வு செய்வர். இதில் முதல் பரிசு பெறுபவருக்கு பட்டு புடவை, இரண்டாம் பரிசு பெறுபவருக்கு வெள்ளி விளக்கும், போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு கெடார் சிவக்குமார் பரிசுகளை வழங்குகிறார். விழுப்புரம் நகரில் வசிப்பவர்கள் மட்டும் தங்கள் வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 98940 09007 என்ற மொபைல் எண் மற்றும் 04146-251388 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிந்து கொள்ளலாம். பெயர் பதிந்திருந்தால் மட்டுமே நடுவர் குழுவினர் வீடுகளுக்கு வந்து கொலுவை பார்வையிடுவர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us