/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஒரே நாளில் 8,100 ரூபாய் வசூலானதுபோட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஒரே நாளில் 8,100 ரூபாய் வசூலானது
போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஒரே நாளில் 8,100 ரூபாய் வசூலானது
போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஒரே நாளில் 8,100 ரூபாய் வசூலானது
போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஒரே நாளில் 8,100 ரூபாய் வசூலானது
ADDED : செப் 23, 2011 09:44 PM
அன்னூர் : போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெறுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அன்னூரில் ஒரே நாளில் 8,100 ரூபாய் வசூலானது. அன்னூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்.,19ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் 22ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சி தலைவர், 195 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 15 ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சுயேச்சைகள் போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை பெற அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் உள்ளது. இதன் பிரதி கேட்பவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தினால் பிரதி வழங்கப்படுகிறது. போட்டியிட விரும்பும் பலரும் நேற்று முன் தினம் ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனர். நூறுக்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி வாக்காளர் பட்டியலை பெற்றுச் சென்றனர். இதன் மூலம் ஒரே நாளில் ஒன்றிய அலுவலகத்தில் 8,100 ரூபாய் வருவாய் வசூலானது. வேட்பு மனு தாக்கலுக்கு 29ம் தேதி தான் கடைசி நாள் என்பதால் இந்த வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.