/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசல் : வாகன ஓட்டிகள் கடும் அவதிபஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசல் : வாகன ஓட்டிகள் கடும் அவதி
பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசல் : வாகன ஓட்டிகள் கடும் அவதி
பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசல் : வாகன ஓட்டிகள் கடும் அவதி
பஸ் ஸ்டாண்ட் அருகே நெரிசல் : வாகன ஓட்டிகள் கடும் அவதி
UPDATED : செப் 22, 2011 04:37 AM
ADDED : செப் 22, 2011 02:32 AM
நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே திருச்சி சாலையில், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
நாமக்கல் பஸ் ஸ்டாண்டையொட்டி திருச்சி சாலை செல்கிறது.
அச்சாலை வழியாக பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டும். அதனால், அப்பகுதியில் நாள் முழுவதும் வாகனப்போக்குவரத்து மிகுந்து காணப்படும்.போக்குவரத்து சீரமைக்க, போலீஸார் பணியில் ஈடுபடுகின்றனர். எனினும் சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்படும் போது, திருச்சி சாலையில் வாகனங்கள் பயணிக்கின்றன. அப்போது, பஸ் ஸ்டாண்டினுள் வாகனங்கள் நுழையும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சரக்கு லாரிகளால், பஸ் ஸ்டாண்ட் வளைவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, சரக்கு லாரி ஒன்று பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, பழுதடைந்து நின்றது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
காலை, மாலை வேளையில் சரக்கு லாரிகளை நகருக்குள் அனுமதிப்பதை தடை செய்ய வேண்டும் என, நகர மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்காததே இப்பிரச்னைக்கு முக்கிய காரணம். இனியும் அலட்சியம் செய்யாமல் சம்மந்தப்பட்ட போக்குவரத்து போலீஸார் காலை, மாலை வேளையில் சரக்கு லாரி போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்.