/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வைக்கோல் படப்பில் தீகன்றுகுட்டியுடன் மாடு பலிவைக்கோல் படப்பில் தீகன்றுகுட்டியுடன் மாடு பலி
வைக்கோல் படப்பில் தீகன்றுகுட்டியுடன் மாடு பலி
வைக்கோல் படப்பில் தீகன்றுகுட்டியுடன் மாடு பலி
வைக்கோல் படப்பில் தீகன்றுகுட்டியுடன் மாடு பலி
ADDED : செப் 21, 2011 12:58 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீயால்
கன்றுக்குட்டியுடன் பசுமாடும் சேர்ந்து பலியானது.கோவில்பட்டி அருகே தெற்கு
திட்டங்குளத்தை சேர்ந்த மாடசாமி மனைவி காளியம்மாள்(40).
இவரது கணவர் இறந்து
விட்டதால் வீட்டருகிலேயே மாட்டுத் தீவனம் அமைத்து மாடுகள் வளர்க்கும்
தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் காளியம்மாள் கோவில்பட்டி
ஆஸ்பத்திரியில் இருக்கும் உறவினரை பார்க்க நேற்று முன்தினம் சென்றதாக
தெரிகிறது. அப்போது அவரது வீட்டருகே இருந்த வைக்கோல் படப்பில் திடீரென
தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாட்டுத்தொழுவ குடிசையும், வைக்கோல்
படப்பும் எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த தீ விபத்தில் ஒரு பசு மாடும்,
கன்றுக்குட்டியும் இறந்தது. விபத்து குறித்து தகவலறிந்த கோவில்பட்டி
தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோவில்பட்டி
கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.