ADDED : செப் 20, 2011 09:12 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் அண்ணாதுரை சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதலியார் பேரவையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
அனைத்து முதலியார் மற்றும் வேளாளர் முன்னேற்றப் பேரவை மாவட்ட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் நகர மையப் பகுதியில் அண்ணாதுரை சிலை அமைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ், கவுன்சிலர்கள் மற்றும் ஆணையர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.