ADDED : செப் 20, 2011 08:57 PM
கடலூர் : கடலூரில் காங்., கட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது.
கடலூர் காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார். நகராட்சித் தலைவர் பதவிக்கு மாவட்டச் செயலர் அலமு தங்கவேல் விருப்ப மனு அளித்தார். மாவட்ட துணைத் தலைவர் கலை விஜயக்குமார், நகரத் தலைவர் ரகுபதி, ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன் உடனிருந்தனர்.


