Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்

போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்

போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்

போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்

ADDED : செப் 20, 2011 12:55 AM


Google News

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள போலீஸ் உட்கோட்ட தலைமையிடங்களில், டி.எஸ்.பி., தலைமையில், குறைத்தீர் கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என தர்மபுரி மாவட்ட புதிய எஸ்.பி., அமீத்குமார்சிங் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி எஸ்.பி.,யாக இருந்த கணேஷ்குமார் சென்னைக்கு மாறுதலாகி சென்றதையடுத்து, பீஹார் மாநிலத்தை சேர்ந்த அமீத்குமார்சிங் நேற்று புதிய எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுகொண்டார். 2003ல் பணிக்கு சேர்ந்த அமீத்குமார்சிங் ஏற்கனவே தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணிபுரிந்துள்ளார்.

நேற்று பொறுப்பேற்றுகொண்ட அமீத்குமார்சிங் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து, சட்டஒழுங்கு பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மூத்தகுடிமக்கள், பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் வசதிக்காக, வாரத்தின் இரு நாட்களில் அந்தந்த போலீஸ் உட்கோட்டங்களில் டி.எஸ்.பி., தலைமையில் குறைத்தீர் கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.



சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விஷேகங்களுக்கு சரக்கு வாகனம் வைத்துச் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக பஸ் மற்றும் ஆட்களை ஏற்றிசெல்லும் வாகனங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நில அபகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில், நிலஅபகரிப்பு தொடர்பாக, 700 மனுக்கள் பெறப்பட்டு, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து, 94438-79777 என்ற மொபைல்ஃபோனில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us