/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மலை வாழ் பிரிவினருக்கு வெல்டர் பயிற்சி முகாம்மலை வாழ் பிரிவினருக்கு வெல்டர் பயிற்சி முகாம்
மலை வாழ் பிரிவினருக்கு வெல்டர் பயிற்சி முகாம்
மலை வாழ் பிரிவினருக்கு வெல்டர் பயிற்சி முகாம்
மலை வாழ் பிரிவினருக்கு வெல்டர் பயிற்சி முகாம்
ADDED : செப் 15, 2011 03:45 AM
விழுப்புரம்:சங்கராபுரத்தில் உள்ள மலை வாழ் பிரிவினருக்கான அரசு தொழிற்
பயிற்சி நிலையத்தில் ஒரு வருட வெல்டர் பயிற்சிக்கு சேர்க்கை நடக்கிறது.இது
குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு:சங்கராபுரத்தில் உள்ள மலை வாழ் பிரிவினருக்கான (எஸ்.டி.,பிரிவு)
அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டிற்கு 24 மாணவர்களுக்கு
ஓராண்டு கால வெல்டர் பயிற்சிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு பயிற்சி
பெற்றதும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இங்கு பயிற்சி
பெறுவோருக்கு ரயில்வே மற்றும் அரசு, தனியார் துறைகளில் வேலை
கிடைக்கும்.மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி மற்றும் உணவுடன் கூடிய
தங்குமிடம் வழங்கப்படும். ஆண்டு உதவித் தொகையாக 1,190 ரூபாய் வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் இங்குள்ள தனி அலுவலரை நேரில் சந்தித்து விண்ணப்ப
கட்டணத்துடன் 235 ரூபாய் செலுத்தி சேர்ந்து பயன் பெறலாம்.இவ்வாறு கலெக்டர்
அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


