/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 13, 2011 12:46 AM
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் பாதுகாவலரை ஜாதி பெயரைக் கூறி அடித்த, செயல் அலுவலரை கைது செய்யக்கோரி திருகோவில் பணியாளர் சங்க தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் 40 பேர் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தப் பெற்ற மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி திருக்கோவிலில் கடந்த 10ம் தேதி அன்று சன்னதியில் வேதலிங்கம் (30) என்பவர் காவலர் பணியில் இருந்தார். இவரை கோவில் செயல் அலுவலர் கணேசன், 'கன்னத்தில் அறைந்து சங்கம் எல்லாம் வைக்கக் கூடாது மீறி செயல்பட்டால் உன் மீது திருட்டுப்பழி சுமத்தி உள்ளே தள்ளி விடுவேன்' என மிரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து வேதலிங்கம் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்க செயலாளர் ரத்தினகுமார் மூலமாக மன்னார்குடி இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனிடம் புகார் கொடுத்தனர். இத்தகவலை அறிந்த செயல் அலுவலர் கணேசன் நேற்று முன்தினம் 11ம் தேதி வேதலிங்கத்தை வேலையில் இருந்து பணி நீக்கம் செய்தார். இச்செயலால் அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்கள் நேற்று காலை ஆறு மணியில் இருந்து வேலைக்கு செல்லாமல் 40 பேர் காலை 10 மணியளவில் கோவில் நுழைவாயில் முன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு செயல் அலுவலரை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவிலுக்கு வந்த இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவலர் வேதலிங்கத்துக்கு மீண்டும் வேலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் மன்னார்குடியில் பகுதியில் உள்ள பக்தர்கள் சில மணி நேரம் தரிசனம் செய்ய இயலாமல் போனதால் அதிர்ச்சியடைந்தனர்.