ADDED : செப் 13, 2011 12:37 AM
அலங்காநல்லூர் : அலங்காநல்லூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.
15 ஆயிரம் மதிப்புள்ள மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி முன்னிலை வகித்தார். முருகேசன் வரவேற்றார். வங்கி மேலாளர் சிவக்குமார், தலைமை ஆசிரியர் ஜெயபாலனிடம் மின்விசிறிகளை வழங்கினார். துணை தலைவர் செல்வராணி நன்றி கூறினார்.