/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கேபிள் "டிவி' தலைமையிடம்ஓசூரில் அமைக்க கோரிக்கைகேபிள் "டிவி' தலைமையிடம்ஓசூரில் அமைக்க கோரிக்கை
கேபிள் "டிவி' தலைமையிடம்ஓசூரில் அமைக்க கோரிக்கை
கேபிள் "டிவி' தலைமையிடம்ஓசூரில் அமைக்க கோரிக்கை
கேபிள் "டிவி' தலைமையிடம்ஓசூரில் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 12, 2011 02:22 AM
ஓசூர்:தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' யில் ஓசூரை தலைமையிடமாக கொண்டு
கண்ட்ரோல் அமைத்துத் தர வேண்டும், என ஓசூர் கேபிள், 'டிவி' நெட்வெர்க்
உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ஓசூர் கேபிள், 'டிவி' நெட்வெர்க்
உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சீனிவாசன் தலைமை
வகித்தார். செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் கோபி, சானவாஸ், துணை
செயலாளர்கள் தட்சீணாமூர்த்தி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' துவங்கி கேபிள் ஆபரேட்டர்களுக்கு தொழில்
பாதுகாப்பு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஓசூர் பகுதிக்கு
உடனடியாக அரசு கேபிள், 'டிவி' இணைப்பு வழங்க வேண்டும், கிருஷ்ணகிரியில்
இருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு அரசு கேபிள் இணைப்பு
வழங்கினால், கேபிள் வயர்கள் அடிக்கடி பழுதடைய வாய்ப்புள்ளது. அதனால்,
ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்லகம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் தளி
ஆகிய பகுதிகளை உள்ளடக்கி ஓசூரை தலைமையிடமாக கொண்டு அரசு கேபிள், 'டிவி'
கண்ட்ரோல் ரூம் அமைக்க வேண்டும்.
ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகள்
நிறைந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம்
உள்ளிட்ட அனைத்து மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். அதனால், ஓசூரில் தனி
கண்ட்ரோல் ரூம் அமைத்து அனைத்து மொழி 'டிவி' யும் கிடைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும், ஓசூர் கேபிள், 'டிவி' சங்கத்திற்கு உள்ளூர் சேனல் வழங்க
வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றினர்.நிர்வாகிகள் நஞ்சப்பன், சரவணன்,
சோமு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தில்
கலந்து கொண்டனர்.