/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இலங்கை தமிழர்களுக்கு உதவி கணக்கெடுப்பு பணி துவக்கம்இலங்கை தமிழர்களுக்கு உதவி கணக்கெடுப்பு பணி துவக்கம்
இலங்கை தமிழர்களுக்கு உதவி கணக்கெடுப்பு பணி துவக்கம்
இலங்கை தமிழர்களுக்கு உதவி கணக்கெடுப்பு பணி துவக்கம்
இலங்கை தமிழர்களுக்கு உதவி கணக்கெடுப்பு பணி துவக்கம்
ADDED : செப் 11, 2011 11:04 PM
திண்டுக்கல் : தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நடத்தி வருகிறது.
தமிழகத்தில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 112 முகாம்களில் இலங் கை தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பாய், துணிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் குடும்பத்தில் மூத்தவர்களுக்கு 400 ரூபாய், அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு 288 ரூபாய் என்ற அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இலங்கை செல்ல ஆர்வமாக இருப்பவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இலங்கையில் அமைதி சூழ்நிலை நிலவினாலும், பலரும் தமிழகத்தில் வசிப்பதற்கே விருப்பம் தெரிவிக்கின்றனர். இதனால் இலங்கை அகதிகள் முகாம்களில் வறுமை நிலைமையிலும், முதுமையிலும் உள் ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய்வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அகதிகள் பிரிவு தாசில்தார்கள், முகாம்களில் உள்ள பள்ளி படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பெறுவதற்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். மேலும் முதியோருக்கான உதவித்தொகை வழங்குவது குறித்த கணக்கெடுப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.