/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையநல்லூரில் வாகன சோதனை 17 ஆட்டோக்கள் பறிமுதல்கடையநல்லூரில் வாகன சோதனை 17 ஆட்டோக்கள் பறிமுதல்
கடையநல்லூரில் வாகன சோதனை 17 ஆட்டோக்கள் பறிமுதல்
கடையநல்லூரில் வாகன சோதனை 17 ஆட்டோக்கள் பறிமுதல்
கடையநல்லூரில் வாகன சோதனை 17 ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : செப் 11, 2011 12:43 AM
கடையநல்லூர் : கடையநல்லூரில் தனிநபர் கட்டணம் வசூலித்து, அபாயகரமான முறையில் இயக்கிய 17 ஆட்டோக்களை போக்குவரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடையநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆட்டோக்களில் அதிகமான அளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும், அபாயகரமான முறையில் ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் நேற்று மாலை கடையநல்லூர் பகுதிகளில் தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரி முத்துசாமி உத்தரவின்படி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடகிருஷ்ணன், ஜெய்மனோகர் மற்றும் போக்குவரத்து துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆட்டோகளில் தனிநபர் கட்டணம் வசூலித்து, அபாயகரமான முறையில் இயக்கியதும், அனுமதி சீட்டிற்கு புறம்பாக ஆட்டோக்கள் இயக்கியதும் கண்டறியப்பட்டது. மேலும் ஆட்டோக்களில் பஸ்களில் வசூலிக்கப்படும் அளவை விட கூடுதலான கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனிநபர் கட்டணம் வசூலித்து அபாயகரமான முறையில் இயக்கியதாக 17 ஆட்டோக்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.